மேற்கு வங்கத்தில் செப். 1ல் காவலர்கள் தினம்: முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

காவலர்களை கவுரவப்படுத்தும் வகையில், செப்டம்பர் மாதம் 1-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் காவலர்கள் தினம் கொண்டாடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் முன்களப் பணியாளர்களாக திகழ்கின்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் பாத்துக்கொள்வதும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு அளிப்பதும் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

இந்நி‍‌லையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் காவலர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில், செப்டம்பர் மாதம் 1-ம் தேதி மாநில காவலர் தினம் கொண்டாடப்படும். செப்டம்பர் 1-ம் தேதி நடக்கும் விழாவில் உயிர் தியாகம் செய்த போலீசாரின் குடும்பத்தினரின் ஒருவருக்கு அரசு பணி ஆணை வழங்கப்படும். காவலர் நலத்துறையை மறுகட்டமைப்பு செய்து சலுகைகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x