வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழலுக்கு மோடி ஆட்சிக் காலத்தில் தீர்ப்பு

2000-ம் ஆண்டு ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்வதில் நடந்த ஊழல் தொடர்பாக சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிக்கு விசாரணை நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பு கிடைத்த உடனேயே உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்ப்புக்கு தடை உத்தரவு பெற்றுவிட்டார் ஜெயா ஜெட்லி.

1999 முதல் 2004 வரை மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தது. அவரது அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி வகித்தார். அப்போது 2000-ம் ஆண்டு இறுதியில் ராணுவத்திற்கு சில தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டது.

 

அந்த ஒப்பந்தத்துக்காக ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸிடம் இருந்து பரிந்துரைக் கடிதம் பெற்றுத் தருவதாக ஜெயா ஜெட்லி, வெஸ்ட்என்ட் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி மேத்தியு சாமுவேலிடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஜெயா ஜேட்லி மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. அவரது சமதா கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் இதில் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.

இந்த ஊழல் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜார்ஜ் பொ்னான்டஸின் அரசு இல்லத்தில் ஆலோசனைக் கூட்டத்தின் போது நடந்ததை தெஹல்கா புலனாய்வு பத்திரிக்கை வெளியிட்டதால் இவ்வழக்கு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயா ஜெட்லி உட்பட  உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் டில்லி உயர் நீதிமன்றம் சென்று தீர்ப்புக்கு எதிராக தடை உத்தரவை பெற்றார் ஜெயா ஜெட்லி. இதனால் கைதாவதிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x