உ.பி.: மகளிடம் அத்துமீறிய தந்தை.. நான்கு வருடம் கழித்து தீர்ப்பு!! 15 ஆண்டுகள் சிறை..

உத்தரப்பிரதேசத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் சித்தப்பாவிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி மாநில சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பெற்ற மகளையே தந்தை அவரது சகோதரருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக போக்சோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து உத்தரப்பிரதேச சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,மகளிடம் அத்துமீறிய தந்தை மற்றும் அவரது சகோதரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x