லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வுகள்.. கர்நாடக மக்கள் மகிழ்ச்சி

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் லாக்டவுன் விதிகள் அமலில் உள்ளன. இதில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
இ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கம், கர்நாடக செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை.
மாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கம், ரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது, கையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டது.
14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது, வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கம்.
செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 4- ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில், மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதியளிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், மக்கள் அதிகமாக கூடுவதற்கும், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த இறுதி முடிவினை மாநில அரசுகளே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 -மணி நேரத்திற்கு குறைவான பயண நேரத்தை கொண்ட மெட்ரோ போக்குவரத்தினை மட்டுமே மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.