உயரிய காரணத்திற்காக பிங்க் வண்ணத்தில் ஜொலித்த திருச்சி மலைக்கோட்டை!!

திருச்சி மலைக்கோட்டை பிங்க் வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உரிய விழிப்புணர்வு இல்லாததால் பெண்கள், மார்பக புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்தால், ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது . இதையொட்டி திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையை இளஞ்சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரித்து விழிப்புணர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, திருச்சியைச் சேர்ந்த ஹர்ஷமித்ரா மருத்துவமனை முயற்சியில், மலைக்கோட்டை முழுவதும் பிங்க் கலர் வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x