தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் விதிகளை மீறி டாஸ்மாக் கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி எச்சரித்துள்ளார்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு, மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x