டிரம்பின் 18 தேர்தல் கூட்டத்தினால் கூடுதலாக 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று!!

அமெரிக்காவில் தொற்று பரவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் டிரம்பின் 18 தேர்தல் கூட்டத்தினால் கூடுதலாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பெரும் விலையை கொடுத்துள்ளனர் எனவும் ஆய்வாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே டிரம்ப் கூட்டம் நடைபெறும் இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், நிலைமை மேலும் மோசமாகலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் டிரம்பை விமர்சனம் செய்துள்ளார். மக்களைப்பற்றி கவலைப்படாத டிரம்ப், தன்னுடைய ஆதரவாளர்கள் பற்றியும் கவலைப்படவில்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x