டெல்லியில் 10 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த 2 சிறார்கள் கைது

புது டெல்லியில், 10 வயது சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியதால், மாட்டி விடுவேம் என்ற பயத்தில் சிறுவனைக் கொலை செய்த இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

புது டெல்லியின் கஜுரி காஸ் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அந்த பகுதி சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். 

மசூதிக்கு வியாழக்கிழமை சென்ற சிறுவன், திரும்பி வராததால், அங்கேதான் அவன் காணாமல் போயிருப்பான் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மசூதிக்குள் தேடுதல் பணி நடைபெற்ற போது, சிறுவனின் உடல் மசூதியின் மேல் மாடியில் கட்டுமான பொருட்களுக்கிடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சிறுவனைக் கடத்தி வந்து, மசூதிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு, பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட நினைத்த இரண்டு சிறார்கள், போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமானதால், சிறுவனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். 

அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறார்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x