“பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு!” – மு.க.ஸ்டாலின்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூரியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கை மூலம் இடித்து தள்ளப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பாபர் மசூதி இடிப்பு குற்றச் சதியை நிரூபிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் தோற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.