ம.பி.,யின் எதிர்காலத்தை இடைத்தேர்தல் தீர்மானிக்கும்: கமல்நாத் நம்பிக்கை

மத்தியப் பிரதேசத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தல் மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
ம.பி.,யில், கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடந்த போது மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, தனது அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.வில் இணைந்ததையடுத்து , அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ. ஆட்சி அமைந்தது. முதல்வராக, சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார்.
தற்போது, ம.பி. மாநிலத்தில் 27 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இடைத்தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், காங். மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:
முந்தைய காங். ஆட்சியில் 26 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய பா.ஜ. அரசு காங். சாதனையை மறைக்கப் பார்க்கிறது.நடக்கவுள்ள இடைத்தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிக்கும் விதமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.