கடனில் மூழ்கும் அபாயத்தில் ஏழை நாடுகள்

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால், ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது’ என, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர், அமினா முகமது கூறியதாவது:சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன.குறிப்பாக, ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த, நீடித்த திட்டம் தேவை.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Source: Reuters