கொரோனா பிரச்னை முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும் – WHO தலைவர்

கொரோனா வைரஸ் பிரச்னை எப்போது முடிவடையும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ள நிலையில், அதற்கு உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பதிலளித்துள்ளார்.
உலகளவில் 2.28 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.5 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர் மருத்துவமனையிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் இறந்தவர்காள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் பிரச்னையால் ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் குப்புற படுத்துவிட்டது. உலகளவிலும் இதே நிலை தான்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த WHO தலைவர், ஸ்பானிஷ் காய்ச்சல் 1918-ல் ஏற்பட்டது. முடிவடைய இரண்டு ஆண்டுகாலம் பிடித்தது. இன்றைய சூழலில் மக்கள் வேகமாக தொடர்பு கொள்ள முடிகிறது. அதனால் வேகமாக வைரஸ் பரவுகிறது. அதே சமயம் நம்மிடம் தொழில்நுட்பமும், அறிவும் உள்ளது. அதை கொண்டு 2 ஆண்டுகளுக்குள் வைரஸ் பிரச்னையை முடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.