மஹாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து பெரும் விபத்து… 60 பேர் சிக்கியுள்ளதாக தகவல்!

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அதில் 60 பேர் வரை சிக்கியிருக்கக் கூடும் என செய்தி வெளியாகியிருக்கிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திலுள்ள கஜல்பூர் எனும் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று திங்களன்று மதியம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் 60 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 அணிகள், உள்ளூர் போலீசார், பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மிகப்பெரிய விபத்தாக இது தெரிகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கன மழை பெய்திருந்தது. அதன் காரணமாக ஏற்கனவே பலவீனமாக இருந்த கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சிலரை கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த இடமே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் போன்று தோற்றமளிக்கிறது. உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.