விவாகரத்து செய்ததால், இளம்பெண்ணை குத்திக்கொன்ற இளைஞன்!

விவாகரத்து செய்த இளம் மனைவியை, குடிகார கணவன் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று குடியேறியவர்கள், பிரவீன் பாபுவின் குடும்பம். இவரது மகள் பாவினிக்கு (வயது 21), இந்தியாவிலிருந்து ஒரு மணமகனை தேர்வு செய்து, அவரை பிரிட்டனுக்கு அழைத்துவந்து, திருமணம் செய்வித்தார் பாபு.

ஆனால் பாவினியின் கணவனான ஜிகுகுமார் சோர்தி (வயது 23) மொடாக் குடிகாரராக இருந்துள்ளார். அதனால் சமீபத்தில் அவருடனான திருமண உறவை முறித்துக்கொண்டார் பாவினி.

கொலைகார கணவர் ஜிகுகுமார்

அடுத்த நாள் வேலைக்கு செல்லாமல் இருந்த ஜிகுகுமார், லைசெஸ்டரில் பாவினி இருந்த வீட்டுக்கு கத்தியுடன் சென்றுள்ளார்.

வீட்டில் பாவினியும் அவரது தாயும் மட்டும் இருந்த நிலையில், பாவினியின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார் ஜிகுகுமார். எப்படியாவது தப்பிவிடவேண்டும் என எண்ணிய பாவினி, இன்னொரு குத்து விழுவதை தவிர்ப்பதற்காக சுருண்டு படுத்துக்கொள்ள, அவரது முழங்காலிலும், முதுகிலும் குத்தியுள்ளார் ஜிகுகுமார்.

பாவினியின் தாய், அவளை விட்டுவிடு, என்னை வேண்டுமானால் கொன்றுவிடு என கதறி கண்ணீர் விட்டிருக்கிறார். எனினும், விடாமல் குத்தி கொன்றுவிட்டு, அங்கிருந்து வெளியேறிய ஜிகுகுமார், கத்தியை தெருவில் வீசிவிட்டு, ஓட்டம் பிடித்திருக்கிறார்.

என்றாலும் இரண்டு மணி நேரத்திற்குப்பின் போலிசில் சரணடைந்த ஜிகுகுமார், தன் வாழ்க்கையே பாழாகிப்போனதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏழு பெண் நீதிபதிகள் மற்றும் ஐந்து ஆண் நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒன்று, ஜிகுகுமார் குற்றவாளி என முடிவு செய்தது. லைசெஸ்டர் க்ரௌன் நீதிமன்றத்தில் நாளை ஜிகுகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

பாவினியை கொலை செய்துவிட்டு ஓடிப்போகும் ஜிகுகுமார்
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x