பட்டியலின இளைஞரை மொட்டையடித்து துன்புறுத்தல்!! பிக் பாஸ் சீசன் -2 நூதன் வீட்டில் அரங்கேறிய கொடுமை..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பெண்டூர்த்தி பகுதியை சேர்ந்தவர் பிக் பாஸ் சீசன் -2 மூலம் பிரபலமான நூதன்.
அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது குடும்ப உறுப்பினர்களும், பணியாளர்களும் 20 வயதுடையை பட்டியலின இளைஞர் ஒருவரை மொட்டையடித்து துன்புறுத்தியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கான ஆதாரங்கள் சி.சி.டி.வி காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
Modern Indians at the comfort of their lavish living room tonsure youth (a Dalit) alleging theft of mobile phone, in Visakhapatnam. Video released by police. #AndhraPradesh
— Tharun (@tharunboda) August 29, 2020
‘என் பேர் ஸ்ரீகாந்த். நான் கடந்த நான்கு மாதங்களாக நூதனின் வீட்டில் தான் பணியாற்றி வந்தேன். கடந்த 1 ஆம் தேதியோடு வேலையிலிருந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு நின்றுவிட்டேன்.
கடந்த வெள்ளிக்கிழமை திடீரென போன் செய்து என்னை அழைத்தார்கள். நான் நூதனின் வீட்டுக்குள் போனதும் செல்போன் திருடி விட்டேன் என்ற போலியான குற்றச்சாட்டை என்மீது சுமத்தி அவரது உறவினர்களும், பணியாட்களும் என்னை அடித்து, முடிதிருத்துபவரை வர சொல்லி முடியை மொட்டையடித்து விட்டனர்’ என போலீசில் புகார் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட இளைஞர்.