இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, தொலைத்தூர கல்வி முறையில் பட்டம் பெற்றவர்களும் சட்டப்படிப்பில் சேர தகுதி உடையவர்கள்..

சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “பன்னிரெண்டாம் வகுப்பை தனித்தேர்வராகவும், பட்டப்படிப்பை தொலைதூர கல்வி முறையிலும் முடித்தேன். பின்னர், சட்டப்படிப்பில் சேருவதற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், தொலைக்கல்வி முறையில் படித்ததால் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பார் கவுன்சில் விதிகளின்படி, தொலைத்தூர கல்வி முறையில் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்பில் சேர தகுதி உண்டு. எனவே என் விண்ணப்பத்தை ஏற்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற வகையில், பார் கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அப்படி விதிகளில் திருத்தம் செய்தால் மட்டுமே சட்டக்கல்வியின் தரம் பேணி பாதுகாக்க முடியும். தற்போதுள்ள இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி மனுதாரர் கிருஷ்ணகுமார் விண்ணப்பிக்க தகுதி உடையவர். பிற தகுதிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் கிருஷ்ணகுமாரை சட்டப்படிப்பில் அனுமதிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x