இதுதான் டி20 கிரிக்கெட்டின் மாஸ்டர் பீஸ் பீல்டிங்!!!வீடியோ இணைப்பு…

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சிக்ஸர் லைனுக்குள் முழுவதும் சென்று, சிக்ஸரை தடுத்து வரலாற்று ஃபீல்டிங்கை ஐபிஎல் போட்டியில் நிக்கோலஸ் பூரான் படைத்திருக்கிறார்.

ஷார்ஜாவில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் 223 ரன்களை சேஸ் செய்து ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் படைத்துள்ளது.

இந்த போட்டியில் இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இப்போட்டியில் பஞ்சாப் வீரர் பூரானின் பீல்டிங் பெரியளவில் பாராட்டை பெற்றுள்ளது.பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் இயங்கி வருகிறார்.

நிக்கோலஸ் பூரன், மயங் அகர்வால், சர்பராஸ் கான் உள்ளிட்டோர் நேற்று சிறந்த பீல்டிங்கை வெளிப்பபடுத்தினர்.

ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் முருகன் அஷ்வின் வீசிய பந்தை சஞ்சு சாம்சன் டீப் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட, சிக்ஸருக்கு போன அந்த பந்தை ஒற்றை கையால் தடுத்து மைதானத்திற்குள் தூக்கி போட்டார் நிக்கோலஸ் பூரன்.

இந்த ஃபீல்டிங்கை டி20 கிரிக்கெட்டின் மாஸ்டர் பீஸ் ஒன்று என சொல்லலாம். இவற்றிற்கும் மேலாக பூரான் மேற்குஇந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தெண்டுல்கர், பீட்டர் சன் போன்ற ஓய்வுபெற்ற முன்னாள் முன்னணி வீரர்கள் பூரானை வெகுவாக பாராட்டியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற பீல்டிங்கை இப்போது தான் முதல்முறையாக பார்ப்பதாகவும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x