“தயவுசெய்து சுட்டுவிடாதீர்கள்” கழுத்தில் பலகையுடன் பவ்யமாக சரணடைந்த பலே குற்றவாளி!”

தயவுசெய்து சுட்டுவிடாதீர்கள் என்று குறிப்பிட்டு கழுத்தில் அட்டையை மாட்டிக்கொண்டு காவலர்களிடம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சரணடைந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நயீம். அவர் பலவிதமான குற்றச்செயலில் ஈடுபட்டதால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை கைது செய்ய, காவலர்களுக்கு துப்பு கொடுப்பவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தின் சம்பால் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த நயீம், கழுத்தில் ஒரு பலகையை மாட்டி காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.
गैंगस्टर एक्ट में वांछित ₹15,000 के इनामी बदमाश ने आज दिनांक 27.09.2020 को थाना नखासा पर स्वयं चलकर गले में आत्मसमर्पण की तख्ती डालकर आत्मसमर्पण किया।@Uppolice @dgpup @CMOfficeUP @KPGBJP pic.twitter.com/1hbiEiH4Wb
— SAMBHAL POLICE (@sambhalpolice) September 27, 2020
அந்த பலகையில், “நான் பல குற்றங்களை செய்துள்ளேன். ஆனால், தற்போது திருந்திவிட்டேன். நான் என்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்கிறேன். என்னை தயவுசெய்து சுட்டுவிடாதீர்கள். நான் சரணடைகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி காவலர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், “தேடப்பட்டுவந்த குற்றவாளி, கடந்த 27.09.2020 அன்று சரணடைந்துள்ளார். அதுவும் கழுத்தில் ஒரு பலகையுடன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.