குடிக்கும்போது சைடிஷ் இல்லாததால் கடுப்பாகி, நண்பரை கொன்றவர் கைது!!

நாக்பூரில் குடிக்கும் போது சைட் டிஷ் சாப்பிட பிரச்சனை ஏற்பட்டதால் நண்பர்களுக்குள் வந்த சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பனாரசி என்பவர் கெய்க்வாட் என்ற அவரது நண்பரை வீட்டுக்கு மதுஅருந்த அழைத்தார். அவரும் குடிப்பதற்கு நண்பரின் வீட்டுக்கு சென்றார். அப்போது நண்பரின் வீட்டில் சைட் டிஷ்ஷாக முட்டை கறி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கெய்க்வாட் ஆத்திரம் அடைந்தார். சிக்கன் இல்லை என்று சண்டை போட்டதாக தெரிகிறது. ஆனால் பனாரசி அப்போது சமாளித்துவிட்டார்.
அதன்பிறகு தொடர்ந்து குடிக்கத் தொடங்கினர். போதை தலைக்கு ஏறியதும் முட்டை கறி சைடு டிஷ் தொடர்பாக மீண்டும் பிரச்சனை மூண்டது. அப்போது கெய்க்வாட், பனாரசியை கட்டையால் கடுமையாக தாக்கினார். அதில் பனாரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை அங்கேயே விட்டுவிட்டு கெய்க்வாட் தப்பிச்சென்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கெய்க்வாடை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.