செல்போன் டவர் கம்பிகளை திருட முயன்று சிறை கம்பிகளை கைப்பற்றிய கில்லாடி கும்பல்!!!

மூன்று நாட்களாக தங்கியிருந்து, செல்போன் டவரின் கம்பிகளை முழுவதுமாக கழற்றி திருட முயன்ற கும்பல் ஒன்று போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில், தனியார் நிறுவன செல்போன் டவர் ஒன்று, கடந்த 13 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்து வந்தது. இதனை அறிந்து கொண்ட 3 பேர் கொண்ட மர்ம கும்பல், செல்போன் டவரை முழுவதுமாக கொள்ளையடிக்க முடிவு செய்தது.

அதன்படி, மூன்று பேரும் செல்போன் டவர் மீது ஏறி, கம்பிகள் மற்றும் பிற உபகரணங்களை மூன்று நாட்களாக அங்கேயே தங்கியிருந்து கழற்றியுள்ளனர். இவற்றுடன் சேர்த்து டவரின் அருகில் உள்ள தானியங்கி அறையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டரை, மர்ம நபர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த இடத்தின் உரிமையாளர் அவர்களிடம் விசாரித்ததில், செல்போன் டவரை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்போன் டவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், திருட்டிற்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x