குல்பூஷண் ஜாதவ், மரண தண்டனை வழக்கு; மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, மறு ஆய்வு செய்வது தொடர்பான மசோதாவுக்கு, பலத்த எதிர்ப்புக்கு இடையே, பாக்., பார்லிமென்ட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி, பாக்., ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. தண்டனையை நிறுத்தி வைத்த சர்வதேச நீதிமன்றம், ‘தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.
இந்த வழக்கில், இந்தியா சார்பில், இந்தியரை வழக்கறிஞராக நியமிக்க, பாக்., அரசு அனுமதி மறுத்துள்ளது.இதையடுத்து, மரண தண்டனையை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பான மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா குறித்து, பாக்., பார்லிமென்டின் சட்ட விவகாரத்துக்கான நிலைக்குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவில் உள்ள எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த எதிர்ப்புகளை மீறி, குரல் ஓட்டெடுப்பில், மசோதாவுக்கு, நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.