சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிட்ட மனைவி… கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவன்!!!
பஞ்சாபில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ் ஷைனி ஆகிய இருவரும் திருமணமாகி தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அசோக்கின் மனைவி சுதீஷ் ஷைனி அதிகமாக செல்போனில் அதிகமாக நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் கணவனின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். அடிக்கடி இருவருக்கும் இடையில் தகராறும் வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அசோக் தனது மனைவியின் செல்பேசியைக் கேட்டுள்ளார். ஆனால், அவர் மனைவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அசோக், கோடரியால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
பின் குளியலறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுதீஷ் ஷைனியை கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.