பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உதவி தொகை பெரும் மாணவர்களின் விவரத்தை பதிவேற்றம் செய்ய எச்சரிக்கை!!!

சேலம்: உதவித்தொகைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாத, தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தேசிய வருவாய் வழி, திறன் உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தேர்ச்சி பெறுவோருக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த, 2020 – 21 கல்வியாண்டில் உதவித்தொகைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்ற, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இரு மாதமாக அறிவுறுத்தப்பட்டு வந்தது. தற்போது வரை, புதிதாக தகுதி பெற்ற, 14 மாணவர்கள், 63 புதுப்பிப்பு மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன.

இதனால், அவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பல முறை தெரிவிக்கப்பட்ட பின்பும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது வருந்தத்தக்கது. உடனே, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து, பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு, தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x