ஐபில் 2020:பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அபார வெற்றி…

ஐபிஎல் டி-20 லீக் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் மிக பிரமான்டமாக நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 22வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பைர்ஸ்டாவ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.

அதிரடியாக விளையடியா பைர்ஸ்டாவ் பஞ்சாப் அணிக்கு பெரும் நோருக்கடியை கொடுத்தார். வார்னர் அவருக்கு ஸ்ரைக் கொடுத்த வந்தார். பேஸ்ரோ மற்றும் வார்னர் இருவரும் அரைசதம் வீளாசினர்.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 160 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 52 ரன்னில் அவுட் ஆக பேஸ்ரோ 97 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய மனிஷ் பான்டே 1 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய வில்லியம்சன் 20 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார். அதை தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயான்ங்க் அகர்வால் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைக்க தவறினர். ராகுல் 11 ரன்னிலும் மயான்ங்க் அகர்வால் 9 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பூரன் மட்டும் அதிரடி காட்டினார். 77 ரன்கள் குவித்த பூரன் அவுட் ஆக பஞ்சாப் அணி தோல்வி நோக்கி சென்றது. சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x