“பேருந்தின் உள்ளே பயணிகள் பிடித்திருப்பது குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா?” கமல்ஹாசன் கேள்வி!!

“பேருந்தின் உள்ளே ஒழுகுவது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்திருப்பது குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா?” என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக அளிக்கிறது. வெளியில் பயணம் செய்யும் மக்கள், பேருந்தில் சென்றால் பாதுகாப்பாக செல்லலாம் என நினைத்து பேருந்தில் பயணம் செய்வதுண்டு. ஆனால், இன்று பேருந்திற்குள்ளும் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.
உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?
பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?
— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2020
இந்நிலையில், கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பதிவில், “புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைபிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் குடைபிடித்து குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.