பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடத்தில் இன்று நடக்கவிருக்கும் கருத்து கேட்பு கூட்டம்!!!

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இன்று பெற்றோரிடம் தமிழக அரசு சார்பில் கருத்துகள் கேட்கப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க , மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது .

அதன்படி இன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் .
கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது .