டெல்லி விவசாயிகள் போராட்டம்; இதுவரை 248 விவசாயிகள் உயிரிழப்பு..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்:- கடந்த 87 நாட்களில் மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் காரணமாக, வாரத்திற்கு சராசரியாக 16 விவசாயிகள் மரணித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்த வந்தபோது, ஒரு வாரத்தில் பிரச்னை தீர்ந்து விடும் என்று நினைத்ததாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.