“டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்” பஞ்சாப் மாநில முதல்வர் அறிவிப்பு!!
ப
“பஞ்சாபில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்று மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அதன் பக்கத்து மாநிலமான பஞ்சாப் அரசு ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் டவுன்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி ஊரடங்கு நேரம் என்றும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 15-ந்தேதிக்குப்பின் மறுஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது.