2024 ம் ஆண்டு வரையிலும் போராட தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு

ளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 2024-ம் ஆண்டு வரையிலும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு வேளாண் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவ.,26-ம் தேதி முதல் பஞ்சாப் ,உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாயி்களின் பிரதிநிதிகளுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு நீதிமன்ற பரிந்துரையில் 4 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. இருப்பினும் தீர்வு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் போராட்டம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போராட்ட குழுவினர், “இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை பின்வாங்கபோவதில்லை. அது வரும் 2024 ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். தேவைப்பட்டால் அதுவரையிலும் போராடுவோம். தங்களின் கொள்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை” என தெரிவித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x