முதல்வர் எடப்பாடிக்கு கொலை மிரட்டலா???

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக வந்துள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அவருக்கு வந்துள்ள கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பிரவீண் என்பவர் அந்த கடிதத்தை அனுப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனித வெடிகுண்டாக மாறி தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கடிதத்தில் தனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து கொண்ட போது அவர் தனது பெயரை மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x