ஆரணியில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு!!

ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஆரணிப்பாளையம், புதுக்காமூர் தெருவில் வசித்து வரும் சந்திரா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் இருந்த வீடு முழுவதும் இடித்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் வீட்டில் இருந்த 8 வயது குழந்தைகள் உள்பட 7  பேர் சிக்கிக்கொண்டனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், சிகிச்சை பலனின்றி  குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x