தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

நான் பீக் ஹவர்ஸ் எனப்படும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் தென்னக ரயில்வே தகவல்.

பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில் மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாமெனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த சென்னை புறநகர் ரயில் சேவை படிப்படியான தளர்வுகளுடன் தற்போது இயங்கி வருகிறது.

அத்தியாவசிய பணி, அரசு பணிக்குச் செல்பவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும், கூட்ட நெரிசல் இல்லாத சமயங்களில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாமெனத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணம் செய்வதற்கு 10 நிமிடத்துக்கு முன்னரே பயணச்சீட்டு கொடுக்கப்படும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x