இரண்டாவது டி-20 இல் இந்திய அணி அபார வெற்றி!!!

பழிக்கு பழியாக ஒருநாள் தொடருக்கு பதிலாக டி20 தொடரை வென்று சாதித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியா -இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கேஎல் ராகுல் 22 பந்தில் 30 ரன்களும், தவான் 36 பந்தில் 52 ரன்களும், விராட் கோலி 24 பந்தில் 40 ரன்களும், சஞ்சு சாம்சன் 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். கடைசி 3 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி 3 ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. ஜாம்பா வீசிய 18-வது ஓவரில் 12 ரன்கள் கிடைக்க கடைசி 2 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. அந்த்ரே டை வீசிய19-வது ஓவரில், பாண்ட்யா இரண்டு பவுண்டரி விரட்டினாலும் 11 ரன்களே கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.

சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில், முதல் பந்தில் 2 ரன் அடித்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் ரன் அடிக்காத ஹர்திக் பாண்ட்யா 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x