இரண்டு சோதனைகளும் வெற்றி – ஆக்ஸ்போர்டு கொரோனா மருந்து ரெடி!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இரண்டு சோதனைகளிலும் வெற்றி பெற்றதால் இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸை ஒழிக்க உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது. இதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானது.
இதனால் இன்னும் ஒரு மாதத்தில் ஆக்ஸ்போர்டு கொரோனா மருந்தை பொது பயன்பாட்டுக்கு அளிக்கும் என கூறப்படுகிறது. இது தயார் ஆனவுடன் முதல் கட்டமாக பிரிட்டனுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்கப்படும். பின்னர் உலக நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.