கொரோனா தடுப்பூசி விலையை அறிவித்தது சீரம் இந்தியா!

சீரம் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.200 என அறிவித்துள்ளனர். உலகிலேயே மிகவும் மலிவான விலை இதுவே ஆகும். 

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ.200 என நிர்ணயித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணி இன்று காலை தொடங்கும் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது. 

முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், போலீஸ் போன்றவர்களுக்கு போடப்படும். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் செலுத்தப்படும். தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும். 2 தடுப்பூசி போட்ட பின்பு சில நாட்கள் கழித்தே முழுமையாக உடல் கொரோனாவை எதிர்க்கும் சக்தி பெறும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x