“விழாக்கால விற்பனைக்காக தற்காலிகமாக 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு” – அமேசான் இந்தியா நிறுவனம்

வரும் விழாக்கால விற்பனைக்காக தற்காலிகமாக 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக விநாயகா் சதுா்த்தி முதல் ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் வரை இந்தியாவில் பல்வேறு முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த காலகட்டங்களில் மக்கள் கையில் அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும் காரணத்தால், அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளிக்கும். அப்போது அதற்கு ஏற்ப விற்பனையும் அதிகரிக்கும். இதனால், தற்காலிகமாக ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா பிரச்சினை காரணமாக மக்கள் கைகளில் பணப்புழக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. எனினும், விழாக்கால விற்பனைக்காக அமேசான் நிறுவனம் தயாராகியுள்ளது. இதற்காக பொருள் விநியோகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் தற்காலிகமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பணியமா்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x