கொரோனவால் உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், “புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.