ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரி, வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.