8 கோடி கொடுத்து ஏமாந்துபோன நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், சச்சின் மனைவி!!!

முறைகேடான நிலங்களை வாங்கி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராவிர்யால் ஏரி நிலத்தை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோரிடம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் விற்று ஏமாற்றியுள்ளது. அவர்கள் மூவரும் 8 ஏக்கர் நிலத்தை 8 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. சச்சின் ஆறு ஏக்கர் நிலமும் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் தலா ஒரு ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளார்கள்.

நிலத்தை விற்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்த மோதலால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x