மீண்டும் உயர்ந்த டீசல் விலை! எவ்வளவு தெரியுமா….

சென்னையில் இன்று (ஜூலை 12), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.01 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள், கடந்த ஒருமாதமாக பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. கடந்த ஜூன், 7ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்றைய தினம் தொட்டு, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், உயர்த்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கும்; டீசல், 77.91 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், 14வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து 78.01 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது