பிரார்த்தனை பலித்தது!! கரோனா பாதிப்பிலிருந்து பாடகர் எஸ்.பி.பி. மீண்டார்..

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாடகர் எஸ்.பி.பி. மீண்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குக் கடந்த 5-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி.க்குச் சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாடகர் எஸ்.பி.பி. மீண்டுள்ளார்.

கடந்த 48 மணி நேரமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று சரண் தெரிவித்துள்ளார். தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் சரண் நன்றி  தெரிவித்துள்ளார்.மேலும் தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x