தலைமை செயலக ஊழியர்களுக்கு கொரோனாவா? பகீர் தகவல்!

கொரோனா வைரசால் சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை தலைமைச் செயலக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதை அடுத்து அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்த போலீஸ் டி.ஜி.பி அலுவலகம், பணிக்கு வரும் போலீசார்களை உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ்காரர்களுக்கு அவர்கள் பணிக்கு வரும்போது உடல் வெப்பநிலை சோதனை நடத்தி அந்த ரிப்போர்ட்டை அனுப்புமாறு டிஜிபி அலுவலகம் கேட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போலீசார் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையிலும் பொதுமக்களை அதிகம் சந்தித்து வரும் நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x