சின்னம்மா விரைவில் வெளியே வந்து விடுவார்” – உற்சாகத்தில் அமமுக-வினர்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது சசிகலா 4 ஆண்டுகள் தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வெளிவரும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்தநிலையில் தற்போது, சசிகலா விடுதலை குறித்து அமமுக வெற்றிவேல் சில கருத்துக்களை கூறியுள்ளது முக்கியத்தும் பெற்றுள்ளது. அவர் கூறியதாவது, சின்னம்மா சிறையின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியில் வருவார். அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். கர்நாடகா மாநில முதலமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதனால் சின்னம்மாவின் விடுதலை கொரோனாவால் தடைபட்டுள்ளது. 

தண்டனைக்காலம் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டது. ஆகையால், சின்னம்மா விடுதலை ஆவதில் இனி பெரிய சிக்கல் இல்லை.எந்த நேரத்திலும் அவர் விடுதலை ஆவார்.நன்னடத்தை மற்றும் சிறையில் இருந்த நாட்களை கணக்கில் கொண்டு அவர் விரைவில் விடுதலை ஆவார். 

சின்னம்மா கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியிலேயே வெளிவந்திருக்க வேண்டும். விடுதலை ஆவதற்கு தற்போது முழு தகுதி ஆகிவிட்டார். விடுதலை தாமதமாவதற்கு கொரோனா தான் காரணம். அதனால், யாரையும் குறை சொல்லமுடியாது. சின்னம்மாவை யாரும் சிறைக்கு சென்று பார்ப்பதில்லை. கடிதம் மூலமாக தான் பேசுகிறோம். அவர் விரைவில் வெளியே வந்து விடுவார். 100% டிசம்பருக்கு முன்னதாகவே சின்னம்மா வந்து விடுவார். சரியான மாதத்தை சொல்ல முடியாது. ஆனால், டிசம்பருக்கு முன்னதாகவே விடுதலையாவது உறுதி என கூறியுள்ளார்.இதனால் எதிர் அணியினர் கலக்கத்துடனும்,அமமுக-வினர் உற்சாகத்துடனும் உள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x