புதிய நாடாளுமன்ற கட்டடம்; 7 நிறுவனங்கள் போட்டி!

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க, 7 நிறுவனங்கள் முன் தகுதி ஏலங்களை சமர்ப்பித்துள்ளன.
தற்போது இயங்கி வரும் இந்திய நாடாளுமன்ற கட்டடம் இட நெருக்கடி மிகுந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசு, 1000 கேடி ரூபாய் மதிப்பில், புதிய நாடாளுமன்றத்தை கட்ட முடிவெடுத்துள்ளது. இப்பணி, 21 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கட்டடம் கட்டுமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களிடம் ஆன்லைன் மூலம் ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியிருந்தது. இதன்படி டாடா ப்ராஜெக்ட் லிமிடெட், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், ஐ.டி.டி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட், என்.சி.சி லிமிடெட், ஷபூர்ஜி பல்லோன்ஜி மற்றும் கோ பிரைவேட் லிமிடெட், உத்தரபிரதேச ராஜ்கியா நிர்மன் நிகாம் லிமிடெட் மற்றும் பி.எஸ்.பி திட்டங்கள் லிமிடெட். உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் முன் தகுதி ஏலங்களை சமர்ப்பித்துள்ளன