மருத்துவர் மீது துப்பியதால், கொலை முயற்சி வழக்கு பதிவு!

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறினர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் மருத்துவர் மீது எச்சில் துப்பியதாகவும் மாஸ்க்கை எடுத்து அவர் மீது வீசியதாகவும் தெரிகிறது
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எச்சில் துப்பிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற சம்பவம் சில தினங்களுக்கு முன் கோவையிலும் நடந்தது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருடைய மனைவி வீட்டிலிருந்து ஆசையாக சமைத்து எடுத்து வந்திருந்த பிரியாணியை சாப்பிட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், மருத்துவர்கள் வளைந்து கொடுக்காததால், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தார்.