ஒரு மணி நேரம் மட்டுமே இறுதி ஆண்டு செமஸடர் தேர்வு!!!

இந்த ஆண்டின் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு ஒரு மணி நேரம் மட்டுமே – அண்ணா பல்கலை கழகம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்படும், சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியாத காரணத்தால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இளநிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவிகளுக்கு பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.