இந்தியாவில் 20 லட்சத்தை நெருங்கும் கொரோனா
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 64 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை, 13 லட்சத்து 28 ஆயிரத்து 337 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 5 லட்சத்து 95 ஆயிரத்து 501 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 904 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.