பெரியார் சிலை அவமதிப்பு; ராகுல் தமிழில் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது காவி நிற சாயம் ஊற்றி அவமரியாதை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது’ என்று அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.