உ.பி.யில் மனைவியுடன் சேர்ந்து தாய்க்கு தீ வைத்த மகன் கைது

உ.பி.யில் மனைவியுடன் சேர்ந்து தாய்க்கு தீ வைத்த மகன் கைது
ஷாஜஹான்புர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவி மற்றும் அவரது பெற்றோருடன் சேர்ந்து, தாய்க்கு தீ வைத்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜலாலாபாத் பகுதியில் குடும்பத் தகராறில், பெண்ணுக்கு தீவைத்து எரித்ததாக அவரது மகன், மருமகள், மருமகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரத்னா தேவி (58), தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீ வைத்ததாக மகன் ஆகாஷ் குப்தா, மனைவி தீப் ஷிகா மற்றும் தீப் ஷிகாவின் பெற்றோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரத்னா தேவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து போது, அவர் மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தில், ரத்னா தேவியின் மகன், மருமகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
Source link