கூரையை பிய்த்து கொண்டு விழுந்த விண்கல்.. ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறிய கூலி தொழிலாளி!!!

இந்தோனேசியாவில் சவப்பெட்டி தொழில் செய்யும் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜோசுவா ஹுடகலுங் என்ற 33 வயதான நபர் வடக்கு சுமத்ராவின் கோலாங்கில் உள்ள தனது வீட்டில் சவப்பெட்டியை செய்து கொண்டிருக்கும் போது, அறையின் கூரை வழியாக விண்கல் ஒன்று வந்து விழுந்துள்ளது. 2.1 கிலோ எடையுள்ள விண்வெளி பாறை கூரை வழியாக மோதிய பின்னர் 15 செ.மீ ஆழத்தில் மண்ணில் புதைந்துள்ளது.
இது குறித்து ஜோசுவா கூறுகையில், “விண்கல் வெப்பமாக இருந்தபோதிலும், அதை கீழே இருந்து இழுக்க முயன்றபோது ஓரளவு சேதமடைந்தது. நான் அதை தூக்கியவுடன், வீட்டில் இருந்த அனைவரிடமும் காண்பித்தேன். அது வந்து விழுந்த போது சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. வீட்டின் கூரை சேதமடைந்ததை கவனித்தேன்” என்று ஜோசுவா கூறினார்.
தூய்மையான பாறை வகைகள் ஒரு கிராமுக்கு 0.50 முதல் 5.00 டாலர் வரை பெறுகின்றன. அதேநேரம் அரிதானவை ஒரு கிராமுக்கு 1,000 டாலர் வரை விற்பனைக்கு வருகின்றன. இந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என மதிப்பிடப்படுகிறது மிகவும் அசாதாரணமான ஒன்றாகும். இந்த வகையிலான ஹவுஸ் ராக் மதிப்பு சுமார் ஒரு கிராமுக்கு 1.85 மில்லியன் டாலர் அல்லது 857 டாலர் ஆகும்.
அவரது வீட்டின் கூரை மீது மோதிய அந்த விண்கல்லின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாறைக்காக ஜோசுவாவுக்கு தனது ஊதியத்தில் 30 ஆண்டுகளுக்கு சமமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.